ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் தடகள விளையாட்டில் 4× 400 மீட்டர் தொடர் ஓட்டம் தடகள பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு நாடு திரும்பிய திருச்சியை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனைகள் தனலட்சுமி சேகர் மற்றும் சுபா வெட்டேஷ் ஆகியோருக்கு

திருச்சி விமான நிலையத்தில் இன்று வந்து இறங்கினர். அவர்களுக்கு உறவினர்கள் மற்றும் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்வில் தனலெட்சுமி சேகர் அவர்களின் தாயார் மற்றும் உறவினர்கள் சுபா வெங்கடேஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனலெட்சுமி சேகரின் பயிற்ச்சியாளர் மணிகண்ட ஆறுமுகம் மாற்றம் அமைப்பின் நிறுவனர் ஆர்.ஏ.தாமஸ் வழக்கறிஞர்கள் ஆறுமுகம், கார்த்திகா ரம்யா,

திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் செயலாளர் ராஜு, பொருளாளர் ரவிசங்கர் , அமைப்பு செயலாளர் சுரேஷ் பாபு, உடற்கல்வி பயிற்சியாளர்கள் சுதாமதி ரவிசங்கர், டாக்டர் சத்தியமூர்த்தி, மக்கள் சக்தி இயக்க சார்பில் மாநில ஆலோசகர் நீலமேகம்,மற்றும் ராக்போர்ட் ஸ்போர்ட்ஸ் அகடாமியை

சேர்ந்த திரளான விளையாட்டு வீரர்கள் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பான வறவேற்ப்பளித்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்