திருச்சி மாவட்ட ஓய்வு பெற்ற சிறைப் பணியாளர்கள் நலச்சங்கத்தின் 4-ம் ஆண்டு ஆலோசனை கூட்டம் தலைவர் குணசேகரன் தலைமையில் இன்று நடைபெற்றது. செயலாளர் விஸ்வநாதன் வரவேற்பு பொருளாளர் கணேசன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் கிருஷ்ணன், ஆறுமுகம் காளியப்பன், பிச்சைமுத்து தெய்வநாதன், நாகைய்யா மற்றும் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 1 7 2022 அன்று முதல் 34% அகவிலைப்படியில் இருந்து வழங்கப்பட்ட4%சதவீத அகவிலைப்படி உயர்த்தி 38 சதவீதமாக மாநில அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு வழங்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாதாந்திர மருத்துவப்படி ரூபாய் 300 இருந்து 1000 உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் வாக்குறுதி படி 70 வயது முடிவுற்றவர்களுக்கு 10% அகவிலைப்படி ஓய்வூதியத்துடன் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்படிக்கு திருச்சி மாவட்ட ஓய்வு பெற்ற சிறை பணியாளர்கள் நலச்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *