திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

 அவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர். கடந்த 11 நாட்களில் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூ.1.கோடி 29 லட்சத்தி 35 ஆயிரத்து 568 ரூபாய் ரொக்கம், 2.8619கிலோ தங்கம், 5.687,கிலோ வெள்ளி. 235 அயல்நாட்டு நோட்டுகளும், 893 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன எனத் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *