திருச்சி முசிறி சித்தாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மருதை வயது 52 இவரது மனைவி புஷ்பா இவர்களுக்கு 1 – பையன் மற்றும் 3- பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 24.9.2021 அன்று எனது கணவர் மருதை சிலர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளிகளான சேட்டு ரூபன், பவானி ஆகிய மூவரும் தற்போது வரை கைது செய்யப்படவில்லை. மேலும் கொலை நடந்த முதல் நாள் அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து என்னையும் எனது கணவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இந்த மூன்று நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்.

தற்போது கணவரை இழந்து பிள்ளைகளுடன் தவிக்கும் தனக்கு இலவச வீடு அல்லது சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடு செய்யக் கோரியும், தமிழக அரசு வழங்கும் நிவாரண நிதி மாவட்ட ஆட்சியர் மூலம் விரைவாக வழங்க கோரியும் என்னுடைய மூன்றாவது மகள் லோகேஸ்வரி இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத சூழ்நிலை உள்ளார் அவருக்கு மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும் என கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இன்று காலை மனு அளித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்