கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிமிடெட். திருச்சி மண்டலம் சார்பில் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களுடன் இணைந்து திருச்சியில் இரத்ததானம் முகாம் நடந்தது.

இம்முகாமினை அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல பொதுமேலாளர் (பொறுப்பு) சிவசங்கரன் தொடங்கிவைத்தார். அரசு மருத்துவர் ஜெர்சிக்கா தலைமையிலான 8பேர் கொண்ட மருத்துவ குழுவினர் இரத்தம் சேமிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக, இரத்ததானம் செய்ய முன்வந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துனர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் உடல் தகுதியினை மருத்துவ குழவினர் பரிசோதனை செய்தனர். இதில் உடல் தகுதியுள்ளவர்களின் இரத்தத்தை சேமிக்கும் பணியில் ஈடுபட்டனர். இரத்ததான முகாமில் பங்கேற்று ரெத்ததானம் செய்த கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *