முசிறி மேட்டுப்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி வயது 80, இவரது கணவர் முனியாண்டி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு உடல் நிலை குறைவால் இறந்துவிட்டார். இவர்களுக்கு வேலுச்சாமி என்ற மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். முனியாண்டி இறப்பதற்கு முன்பாக தனது மகன் வேலுச்சாமி பெயரில் தான செட்டில்மென்ட் பத்திரத்தை எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட வேலுச்சாமி இவரது தாயார் ராஜாமணியை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார். தற்போது ராஜாமணி அவரின் கடைசி மகளான அன்பரசி வீட்டில் வசித்து வருகிறார். தற்போது கடைசி மகளான அன்பரசி வீட்டில் கணவருக்கும் அவருக்கும் இடையே குடும்ப பிரச்சனையால் ராஜாமணியை வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி விட்டனர். இதனால் வாழ வழியின்றி தவித்த ராஜாமணி தனது மகனுக்கு அளித்த தான செட்டில்மென்ட் பத்திரத்தை பெற்றோர் மற்றும் முதியோர் நலவாழ்வு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் ரத்து செய்யக்கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால்.

இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தனது கழுத்தில் நீதி கிடைக்கவில்லை என்னை கருணை கொலை செய்யுங்கள் எனக்கேட்டு கழுத்தில் பதகை மாட்டிக் கொண்டு மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலர்கள் மூதாட்டியின் கழுத்தில் மாட்டி இருந்த பதாகை அகற்றி கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *