திருச்சி வயலுார் சாலையில் உள்ள பிஷப் ஹீபர் கலுாரியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு பார்வையிட்டார் . பின்னர் , பணியின் போது மரணமடைந்த அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் வாரிசுதாரர்கள் 4 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு வழங்கினார் .

இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் ( முசிறி ), பழனியாண்டி ( ஸ்ரீரங்கம் ) மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் , நகரப் பொறியாளர் அமுதவல்லி , செயற்பொறியாளர்கள் சிவபாதம் , குமரேசன் உதவி ஆணையர் செல்வபாலாஜி , ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி , முன்னாள் துணை மேயர் அன்பழகன் , மாவட்டப் பிரமுகர் வைரமணி , அரசு வழக்கறிஞர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *