வேளாண்மை மற்றும் உழவர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் பேட்டி.. திருச்சியில் கடந்த 40 நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற கேள்வி? எதற்காக போராட்டம் நடத்துகிறார், அய்யாக்கண்ணு எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார். ஊடகங்கள் இருப்பதால் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் தொடர்ந்து தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் விவசாயிகளின் நலனை காக்கும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக நிதி நெருக்கடி இருந்தாலும் விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு அதை நிறைவேற்றி காட்டியுள்ளார். தொடர்ந்து விவசாயிகளின் உணர்வுகளையும் சூழ்நிலையும் கருத்தில் கொண்டு பல்வேறு நிதி நெருக்கடி வந்தாலும் முதலமைச்சர் விவசாயிகளுக்கு தனியாக நிதிகளை ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மேலும் கடந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு திட்டங்களை அறிவிப்பதாக தேர்தல் வருவதற்கு முன்பாக வெற்று அறிக்கையை அறிவித்துவிட்டு சென்றுவிட்டார்கள், அதையும் தற்போது திமுக ஆட்சி வந்த பிறகு அந்த திட்டங்களையும் விவசாயிகளுக்கு நிறைவேற்றி காட்டியுள்ளார் நமது முதலமைச்சர். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அமைச்சர் ஒருவரை, ஒரு தனி நபர் சனாதானம் பேசியதற்காக தலையை வெட்டி விடுவேன் என்று கூறியுள்ளார் இதற்கு மத்திய அரசு சட்ட ரீதியான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். குறிப்பாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த அரசு அவர் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று தனிநபரை மிரட்டுவதற்கெல்லாம் திராவிட முன்னேற்ற கழகம் பயந்தது அல்ல.