திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், தமிழக நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழம் மற்றும் பொன்னான ஆயிரம் நாட்கள் குறித்த மடிப்பேடு அடங்கியப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.

முன்னதாக, வளைகாப்பு நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் உடல் எடை மற்றும் இரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு 5 வகையான கலவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன். சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் மற்றும் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *