தமிழகம் முழுவதும் 757 உடல்களை ஜாதி மத பேதமின்றி மத வழி முறைகளுக்கு ஏற்ப அடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு அங்கீகாரம் வழங்க கோரி மனு அளித்தனர்.

தமிழகத்தில் கொரானா தொற்று பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். அவர்களை மனிதாபிமான எண்ணத்துடன்அடக்கம் செய்வதில் இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அனைத்து ஜாதி மத பேதமின்றி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த உடல்களை அவரவர்கள் மத சடங்குகளின் படிமுன்னின்று அடக்கம் செய்து வருகின்றனர்.

இதுவரை தமிழகத்தில் சுமார் 757 உடல்களை அடக்கம் செய்துள்ளனர். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் உதவி மற்றும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு பணி செய்து வருகின்றனர். மேலும் உதவி மையங்கள் மூலம் மனநல ஆலோசனைகள், மருத்துவ வழிகாட்டுதல் மற்றும் மருந்துகளை வழங்குதல், ஆம்புலன்ஸ் சேவைகளை முன்னின்று செய்து வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் சுமார் 24ஆயிரத்து 35 குடும்பங்களுக்கு ரூபாய் ஒரு கோடியே 97 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கி உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 49உடல்களை அவர்கள் மத வழிபாட்டில் முறையில் அடக்கம் செய்துள்ளனர்.இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் சபியுல்லா தலைமையில்திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து அமைப்பின் சார்பில் மேற்கொண்டு வரும் பணிகளை அவருக்கு தெரிவித்ததுடன், மேலும் பணிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்ய கோரியும், தமிழகத்தில் 27 அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் சேர்த்து அங்கீகரித்து அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *