திருச்சி தில்லைநகரில் உள்ள கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் திமுகவின் மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவு நாளான 07.08.2022 அன்று மௌன அஞ்சலி ஊர்வலம் நடத்தி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்துவது. தமிழின தலைவர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நாளன்று திருச்சி மத்திய மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றிய நகர பகுதி பேரூர் கிளை கழகங்களில் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்தினை வைத்து மாலை அணிவித்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது. தமிழகத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் உலகமே வியக்கத்தக்க அளவில் போட்டியை நடத்திக்காட்டி நற்பெயரையும், தமிழகத்தின் தனி சிறப்பினையும் உலகறிய செய்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது என மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ,மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன்,சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தர பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரணி குமார்,இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *