அரசு கொடுத்த பட்டா அரசு கேசட்டிலும் ஏற்றாத குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செபஸ்தியம்மாள் கூறுகையில்:-
திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் 26 ஆவது வார்டு புத்தூர் கல்லங்காடு பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கடந்த 2008 ஆம் ஆண்டு அப்பகுதியில் வீட்டுமனை கேட்டு அப்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். மனுவை பரிசீலித்த அப்போதைய கலைஞர் அரசு அப்பகுதியில் இலவச வீட்டு மனை பட்டாவிற்கு அனுமதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மனு அளித்த மக்களுக்கு அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த பட்டாவை அரசு கெசட்டில் ஏற்றவில்லை, இணையதளத்தில் ஏற்ற வில்லை.
இதுகுறித்து அரசு அதிகாரியிடம் முறையிட்டால் அரசு அதிகாரிகள் இது அரசு புறம்போக்கு நிலம் என்றும் மயானத்திற்கு சொந்தமான இடம் என்றும் கூறி வருகின்றனர். இது குறித்து அமைச்சர் கே.என்.நேருவிடம் முறையிட்டபோது அவர் இது டிஆர்ஓவிடம் கூறியது அடுத்து அவரும் ஏழு நாட்களுக்குள் இடத்தை பார்வையிட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தனர்.