முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திமுக தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில்உள்ள அண்ணா மற்றும் கலைஞர் உருவச் சிலைகளுக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் லால்குடிசட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன். துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், முசிறி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன்,ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி, மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கதிரவன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அனைவரும் இணைந்து கழகக் கொடியை ஏற்றினார்கள்.

பின்னர் அறிவாலயத்தில் அமைந்திருக்கும் கலைஞரின் திருஉருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.