திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம், மலைக்கோட்டை பகுதி மற்றும் 14 அ வட்ட திமுக சார்பில் மறைந்த திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெருமுனை கூட்டம் திருச்சி பாபு ரோடு பகுதியில் நடைபெற்றது .14வது வட்டச் செயலாளர் இளங்கோ ,14 அ வட்ட செயலாளர் உதயா ரஃபி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பகுதி கழகச் செயலாளர் மோகன் வரவேற்புரை ஆற்றினார். மாநகர செயலாளர் மதிவாணன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கந்திலி கரிகாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கவுன்சிலர் லீலாவேலு உட்பட மாவட்ட ,மாநகர, பகுதி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் 150 பெண்களுக்கு சேலைகள் பரிசாக வழங்கப்பட்டது.