திருச்சி சிங்காரதோப்பு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்.. ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை சிறப்பு வழிபாடு ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்தேன். பின்பு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தெற்கு கோபுர வாசலில் வெளியே அமைக்கப்பட்டு இருந்த ஈ. வேரா, சிலை அகற்றப்பட்ட வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றது அதில் ஆஜர் ஆனேன். இதனைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தரிசனம் செய்து மீண்டும் மோடி, வேண்டும் மோடி , என பிரார்த்தனை செய்தேன். மீண்டும் மூன்றாவது முறையாக பாரத பிரதமராக மோடி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வேண்டி கொண்டேன். குறிப்பாக ஆடி மாதத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், சிறப்பு வழிபாடுகள், சிறப்பு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறும். எனவே இந்த ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் கூழ்வாருக்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும்.

மேலும் தமிழ்நாட்டில் இஸ்லாமிய ரமலான் பண்டிகையின் போது நோன்பு கஞ்சி திறப்பதற்கு தமிழக அரசு சார்பில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்குகிறது. அதேபோல ஆடி மாதத்தில் இந்து கோவில்களுக்கும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் டெல்டா மாவட்ட மக்களுக்கு இன்று கருப்பு தினம் ஆகும். கர்நாடக அரசு , நீதிமன்ற தீர்ப்பு வழங்கியும், காவிரி ஆணையம் அமைத்தும், தண்ணீரை திறக்காமல் மழை பெய்தால் தண்ணீர் தருவேன் என கூறி வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி அழைத்த கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றது கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களுக்கு தேவையான தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலைவாசி ஏறி உள்ளது. இதுகுறித்து தமிழக அமைச்சர்களிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினால் இதற்கு மத்திய அரசுதான் காரணம் என பொய் வதந்தி பரப்பி வருகிறார்கள். மேலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு விலைவாசி சீராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் தமிழகத்தில் மின்சாரம், பத்திரப்பதிவு உள்ளிட்டவைகளுக்கு 10 சதவீதம் கட்டணம் உயர்த்தபட்டுள்ளது. மத்திய அரசு மானியம் வழங்கியும் டிஜிட்டல் ரீடிங் வழங்கவில்லை, இந்த மின்சார கட்டண உயர்வால் நூல் விலை உயர்வு ஏற்படுகிறது. இதனால் தறி நெய்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.இதனை கண்டித்து அரசிடம் கேள்வி எழுப்பினால், 2014ஆம் பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி 15 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் தருவதாக கூறினார், என பொய் வதந்தி பரப்பி வருகின்றனர என்றார்.

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்த போது திடீரென நஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். பின்பு அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் இன்னும் உடல்நிலை சீராகவில்லை என கூறி மருத்துவமனையில் இருந்து வருகிறார். இதேபோல் அவரது தம்பி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அவருக்கும் இருதய நோய் பிரச்சனை உள்ளது என கூறுகிறார்கள். செந்தில் பாலாஜி மீது போடப்பட்ட வழக்கில் தீர்ப்பில் அமலாக்கத்துறை தனது கடமையை செய்யலாம், விசாரணையை மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்ததுள்ளது. ஏற்கனவே அமைச்சர்கள் ஐ பெரியசாமி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணனின் மீது போடப்பட்ட வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் அதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்திலும் ,அவருக்கு சொந்தமான இடத்திலும் அமலாக்கத்துறை அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகிறார்கள். அமைச்சர் பதவி இருப்பதால் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்காமல் முடிக்க முயற்சி செய்து வருகிறார்கள் என குற்றம் சாட்டினார்.

ஆகஸ்ட் 16ஆம் தேதி பொது சிவில் சட்டத்தை ஆதரித்து சனாதன மாநாடு நடைபெற உள்ளது. இதேபோல் பழனியில் பாரதமாதா பக்தர்கள் மாநாடு நடைபெறும். ஆகஸ்ட் மாதம் 29 தேதி ராமேஸ்வரத்தில் எம் மக்கள் எம் நாடு என்ற தலைப்பில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்திற்கு இந்து மக்கள் கட்சி முழுமையாக ஆதரவளிக்கும். மீண்டும் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி அமைய இந்த நடைபயணம் ஒரு திருப்புமுனையாக அமையும். இந்தியாவில் விஞ்ஞானிகள் ராக்கெட் ஏவி வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் சுதந்திரம் அடைந்த பிறகு ஈ.வேரா இந்தியாவில் ஒரு ராக்கெட் கூட விட முடியாது எனக் கூறினார். இதை எல்லாம் முறியடித்து இந்தியாவில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ராக்கெட்கள் அனுப்பி வெற்றி பெற்று வருகின்றனர். மேலும் நேற்று தமிழக அரசு சார்பில் மதுரையில் ரூபாய் 250 கோடி செலவில் கலைஞர் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தனர். தற்போது டிஜிட்டல் முறை வந்துவிட்டது, ஆனால் கருணாநிதி சிலை, பேனா நினைவு சின்னம், வைப்பது என தமிழ்நாடு அரசு பணத்தை வீணடிக்கின்றனர். கலைஞர் நூலகம் என்ற பெயரை திருவள்ளுவர் நூலகம் என பெயர் மாற்றி வைக்க வேண்டும். மேலும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் தொடர்ந்து இந்து மக்களை இழிவு படுத்தி வருகிறார். பூமி பூஜை நடைபெறும் போது மற்ற மதத்தினர் எங்கே என இழிவுபடுத்தி மத உணர்வு ,மத கலவரம் ஏற்படும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு 150 சி பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரது பாராளுமன்ற பதவியை பறிக்க வேண்டும் என்றார். மேலும் இந்த நிகழ்வில் மாநில செயலாளர் குருமூர்த்தி, மாநில துணைத் தலைவர் மாரி ஜி ,மாநில செயலாளர் ஸ்ரீ ராம், மாவட்ட பொதுச்செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *