திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிகல்வித். துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்து 2000 பயணிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினர்கள்.. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார் கதிரவன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், அப்துல் சமத்,மாநகராட்சி ஆணையர். வைத்திநாதன், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் .. திருச்சி மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது இந்த குழு மூலமாக புறநகர் பகுதிகளிலும் சென்று முகாம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. திருச்சியில் மர்ம காய்ச்சலுக்கு பெண் உயிரிழந்த சம்பவம் குறித்த கேள்விக்கு.., அந்தப் பெண் இறப்பிற்கான பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை அது வந்த பின்பு தான் என்ன பாதிப்பு என தெரிய வரும் என கூறினார்