திருச்சி மாவட்டம், பனையபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா- லட்சுமி , இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கருப்பையா இறந்துவிட்டார். குழந்தைகளை வளர்பதற்காக தாய் லட்சுமி திருச்சி மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களின் மூத்த மகள் தங்கபொண்ணு – (20 வயது), இவர் திருவெறும்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இயற்பியல் பாடம்- இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னுடன் 6 முதல் 12 வகுப்பு வரை படித்த, திருவள்ளசோழலை பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது -20 ), இவர் சமயபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக தொடர்ந்த பழக்கவழக்கம், காலப்போக்கில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வதும் தனியே சந்தித்துக் கொள்வதும் போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளது. ஒரு கட்டத்திற்கு மேலாக பாலாஜி என்பவர், உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று பல ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணிடம் தவறாக நடந்து உள்ளார். பின்பு தொடர்ந்து இருவரும் தனிமையில் சந்தித்துக் கொண்டுள்ளனர். இதனால் அந்தப் பெண் கர்ப்பம் தரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாலாஜி என்பவரிடம்,பாதிக்கப்பட்ட தங்கப்பொண்ணு நான் கர்ப்பமாக உள்ளேன் என்னை திருமணம் செய்து கொள் என்று கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு பாலாஜி என்பவர் உடனடியாக கர்ப்பத்தை கலைத்து விடு என்று கூறியுள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பத்தை கலைக்க முடியாது உன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்நிலையில் பாலாஜி குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவருடைய குடும்பத்தினரையும் மிரட்டியதாகவும், பணம் தருகிறோம் கர்ப்பத்தை கலைத்து விடு எங்கள் பையன் உங்க வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். ஆகையால் மனம் உடைந்த அந்தப் பெண் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் காவல் நிலையத்தில் பணிபுரிய காவலர்கள் உரிய முறையில் புகாரை எடுத்துக் கொள்ளவில்லை இதுவரை, நாங்கள் கொடுத்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். ஆகையால் இன்று திருச்சி மாவட்ட ஆட்சிய அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டநாளில், பாதிக்கப்பட்ட தங்க பொண்ணு அவருடைய குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியர் பிரதீப்மாரிடம் புகார் மனு அளித்தனர்.

புகார் மனுவை படித்துப் பார்த்துவிட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து உரிய நடவடிக்கையை எடுக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட தங்கபொண்ணு பேசியது… பாலாஜி என்பவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் பழகினார். தற்போது நான் 5 மாதம் கர்ப்பமாக உள்ளேன். இந்நிலையில் காவல்துறையிடம் சென்று புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலாஜி குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடியாது பணம் தருகிறோம் கர்ப்பத்தை கலைத்து விடு என்று மிரட்டுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் எங்கள் பகுதி முழுவதும் என்னைப் பற்றியும் என் குடும்பத்தினர் பற்றியும் தவறாக சித்தரித்து பேசி வருகிறார்கள். எங்கள் பகுதியில் இருக்கக்கூடிய மக்களே எங்களைப் பார்த்து மிகவும் கொச்சையான வார்த்தைகளை கூறி ஏளனமாக பேசுகிறார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்குச் செல்லும் போது பாலாஜி உடைய உறவினர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் என அனைவரும் மிகவும் கேவலமாக கேலி செய்வதால் தற்போது என் தங்கைகள் இரண்டு பேருமே பள்ளிக்கு செல்ல முடியவில்லை. என் குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டுக்குள்ளே அடைந்து கிடைக்கிறோம். எனக்கு நீதி கிடைக்க வேண்டும். என்னை கர்ப்பமாக்கிய பாலாஜி என்பவரை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *