அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவரின் இடைக்கால பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்திடக்கோரி தமிழக முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட வட்ட தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. மேலும் நேற்று மாலை கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை மற்றும் சேலம் ஆகிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலக சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியனின் இடைக்கால பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்திட கோரியும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்தும், மேலும் பெண் அலுவலர்களை ஒறுமையில் தரை குறைவாக வசைப்பாடி அவமதித்து அரசு நிர்வாகத்தில் அத்துமீது அடாவடியாக தலையிட்டு வரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்த் கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் காத்திருப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. கோரிக்கை விளக்கவுரையை மாவட்ட செயலாளர் பிரேம் குமார் விளக்கி கூறினார்., தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில துணை தலைவர் பெரியசாமி மற்றும் மாவட்ட தலைவர் பால்பாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *