அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய, திமுக அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் 62 பேர் பலியான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும்,

திருச்சி அதிமுக ஒருங்கிணைந்த மாவட்ட கழகம் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக திருச்சி மாவட்ட கழக செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி, சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் திரளாக பங்கேற்றனர்.

இதில் “கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறிய முதல்வரே பதவி விலகு”, – “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்”, – “கண்ணீரில் கள்ளக்குறிச்சி – கருணையற்ற முதல்வரே ராஜினாமா செய்” – # Resign_Stalin – போன்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகளை கையில் ஏந்தி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சிவபதி, அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *