தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சார்பில் திருச்சியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில சிறுபான்மை துறை துணை தலைவர் மன்சூர் அலி தலைமை தாங்கினார். முன்னதாக மாநில சிறுபான்மை துறை துணைத் தலைவர் என்ஜினீயர் பேட்ரிக் ராஜ்குமார் வரவேற்றார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்தராஜ்,  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரன், மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் அச்சார்ஜிங், மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் ரெக்ஸ்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான திருநாவுக்கரசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நோன்பு திறந்து பேசினார்.அப்போது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மலர சிறுபான்மையினர் முதல் காரணமாக இருந்தனர். அதேபோன்று வருங்காலத்தில் ராகுல்காந்தி தலைமையில்  மத்தியில் ஆட்சி அமைய நீங்கள் தான் முதல் காரணமாக இருக்கப் போகிறீர்கள். அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

விழாவில் மாவட்ட செயலாளர் ராஜா டேனியல் ராய், மாவட்ட மகளிரணி தலைவி சீலா செலஸ், மலர் வெங்கடேஷ், ஜாகிர் உசேன், நதீம், அக்பர் ஜுவல்லரி அயூப் கான், தொழிலதிபர்கள் முகம்மது இஸ்மாயில், முகம்மது அபூபக்கர் உள்பட திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர். முடிவில் சிறுபான்மை துறை திருச்சி மாவட்ட தலைவர் ஜூபேர் அலி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *