2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சிக்கும் ம.தி.மு.க வினருக்கும் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி ணைப்பாளர் சீமான் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜரானார். அந்த வழக்கில் மீண்டும் செப்டம்பர் 19 ஆம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதே போல அந்த சம்பவத்தில் நாம் தமிழர் கட்சியினர் தங்களை தாக்கியதாக ம.தி.மு.க வினர் கொடுத்த வழக்கில் வரும் 25ஆம் தேதி சீமான் மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்,

இலவசங்கள் கூடாது என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார்,இதேபோல் தமிழக நிதி அமைச்சர் இலவசங்கள் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என நிதியமைச்சர் பி.டி.ஆரால் நிரூபிக்க முடியுமா இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம் தான் இலவசங்களால் நாடு ஒரு புள்ளி அங்குலம் கூட வளராது. காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் ஒரே கொள்கையை கொண்டது தான். காங்கிரஸ் கதர் கட்டிய பாஜக, பாஜக காவி கட்டிய காங்கிரஸ். சுதந்திர கொடியை பிடிக்கும் தகுதி ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு இல்லை. மிகவும் வசதியான நேரு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று 16ஆண்டு காலம் சிறையில் இருந்தார். அவரையும் பிரிட்டிஸ்க்கு சாகும் வரை விஸ்வாசமாக இருப்பேன் என கடிதம் எழுதிய சாவர்க்கரையும் பிரதமர் மோடி எப்படி ஒப்பிடலாம். அது எப்படி சரி, அவரை எப்படி வீரர் என கூறலாம்? இப்படி தான் அவர்கள் வரலாறை பல வகையில் திரித்துள்ளார்கள். வீரர் என்றால் சுபாஷ் சந்திரபோஸ் போலவும், பகத்சிங் போலவும் இருக்க வேண்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்த வரை வீரர் என எப்படி அழைப்பீர்கள். வீர சாவர்க்கர் அல்ல கோழை சவர்க்கர்‌. அதிமுகவில் நடப்பது அவர்களின் உட்கட்சி பிரச்சினை அது அவர்களின் பஞ்சாயத்து. பெரிய நாட்டாமையிடம் அவர்கள் பேசி தீர்வு காணட்டும். நாம் மக்கள் பிரச்சினை பேசுவோம் ஓபிஎஸ்வும், இபிஎஸ்வும் இணைந்து பொதுக்குழுவை நடத்த முடியுமா என கற்பனை செய்து பாருங்கள். அங்கு ஒரு நகைச்சுவை நாடகம் நடக்கிறது நாம் வேடிக்கை பார்ப்போம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *