திருச்சி மாவட்டம், புங்கனூர் கிராமம், அருளானந்த உடையார் தெருவைச் சேர்ந்தவர் சந்திரலிங்கம் என்பவரது மகன் சுதாகர் (24). இவர் தனியார் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மல்லிகா – தனவேல் என்பவரது மகள் காவியா (19) என்பவரை கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி திண்டுக்கல்லில் உள்ள சாதி மறுப்பு திருமண மையத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து அரசு சட்ட விதிமுறை படி திருமணத்தை பதிவும் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இவர்களது திருமணம் வீட்டுக்கு தெரிய வரவே காவியாவின் சகோதரர் சுதாகரை அணுகி முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக கூறி அழைத்துச் சென்றார். ஆனால் காவியவை தொடர்பு கொள்ள முடியாதபடி அவரது செல்போனை பறித்துக்கொண்டு, மேலும், அவரை பார்க்கச் செல்லும்போது கொலை மிரட்டல் விடுத்தும் பெண்ணைக் கொடுக்க முடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்ந்து சுதாகர் திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம், மற்றும் ஜீயபுரம் காவல் நிலையத்தில் தனது காதல் மனைவி மீட்டுத் தரக்கோரி புகார் அளித்தார், ஆனால் இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், காவியாவின் சகோதரர் வழக்கறிஞர் என்பதால் அவரைத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக சுதாகர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்