திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே உள்ள காதி கிராப்ட் வளாகத்தில் காந்தி திருவுருவ படத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மேயர் அன்பழகன் ஆகியோர் திறந்து வைத்தனர் தொடர்ந்து காதி கிராப்ட்-ல் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தனர். மேலும் நவராத்திரி பண்டிகையினை முன்னிட்டு, 01.09.2023 முதல் 31.10.2023 முடிய மாபெரும் கொலு கண்காட்சி மற்றும் விற்பனை பிரிவும் தொடங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாம் வாங்கும் ஒவ்வொரு ரூபாய் மதிப்புள்ள கதர் மற்றும் கிராமப்பொருள் உற்பத்தி பொருள்கள், நமது கிராமங்களில் வாழும் இலட்சக் கணக்கான ஏழை, எளிய குடும்பங்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி, வறுமையினை போக்கிட உதவும். எனவே, அண்ணல் காந்தியடிகளின் கனவினை நனவாக்கிட, திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத்துறை நிறுவனங்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி, பல்கலை கழகங்கள் மாநகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், ஏனைய ஊ பொதுமக்கள் அனைவரும் கதர் மற்றும் கிராமப் பொருள்களை கொள்முதல் செய்ய வேண்டும் . மேலும் தீபாவளி சிறப்பு விற்பனையில் கதர், பாலியஸ்டர் , பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம், உல்லன் ராகங்களுக்கு 20 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்குகிறது . கடந்த ஆண்டு 2.17 கோடிக்கு தீபாவளி விற்பனையானது இந்த ஆண்டு 3.78 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *