காந்தி ஜெயந்தியை முன்னிட்டு,திருச்சி சின்னகடைவீதியில் இயங்கிவரும் பீமா ஜூவல்லரி ஓவியப்போட்டியை நடத்தியது.”இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்” எனும் தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில்,திருசியைச் சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது பெற்றோருடன் ஆர்வமாக கலந்துகொண்டனர்.

இதில் மாணவர்கள் வரைந்த காந்தி ,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ,வீரமங்கை வேலுநாச்சியார் ,பகத்சிங் ,ஜான்சி ராணி உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களின் கண்கவர் ஓவியங்கள் அனைவரையும் கவர்ந்தது. இதில் காட்டூர் மான்போர்ட் பள்ளியின் மாணவர்கள் ஜே. ருபதர்ஷா முதல்பரிசையும், எம். சமந்தா ஷெர்லின் இரண்டாவது பரிசையும், செயிண்‍ட் ஜேம்ஸ் பள்ளி மாணவர் . டி .கிரித்திக் கவாசன் ஆகியோர் ஆறுதல் பரிசையும் வென்றனர்.

இப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி பீமா ஜூவல்லரியின் மேனேஜர்களான கார்த்திக், இந்துமதி,.பாஸ்கர், ரவிகுமார், .தனபால், ஆனந்தராஜ் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *