திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட ஆளவந்தான் நல்லூர் கிராமத்தில் நமது தேசிய பறவையான மயில் காயமடைந்த நிலையில் நடப்பதற்கும் பறப்பதற்கு முடியாமல் ஊருக்குள் சுற்றித்திரிந்தது. மேலும் காயமடைந்த ஆண் மயிலுக்கு தெருவில் உள்ள நாய்களால் ஆபத்து நேர்ந்த விடக்கூடாது என்ற நோக்கத்தில் அங்குள்ள இளைஞர்கள் சிலர் மயிலை காப்பாற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்தனர். இளைஞர்கள் அனைவரும் மயிலை வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். மயிலை பெற்றுக் கொண்டு உரிய சிகிச்சை அளித்த வனத்துறை அதிகாரிகள் ராஜேஷ் மற்றும் சஞ்சய் ஆகியோர் மயிலை எடுத்து சென்றனர்.

நமது இந்திய திருநாட்டின் தேசிய பறவையான மயிலை காப்பாற்றி வனத்துறை அதிகாரிகள் ஒப்படைத்த அப்பகுதி இளைஞர்களை வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *