திருச்சி மாவட்டம் பூலாங்குடியை சேர்ந்தவர் பொன்னி இருளன். இவரது மனைவி அமுதா (40). இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக தனக்கு சொந்தமான மாருதி காரை அடமானம் வைத்து ரூபாய் 1 லட்சம் வேண்டும் என பூலாங்குடியை சேர்ந்த நாராயணம்மாள் என்ற பெண்ணிடம் கடந்த மாதம் 7 ஆம் தேதி தனது காரை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து நாராயணம்மாள் திருவெறும்பூரில் உள்ள சதாம் உசேன் மற்றும் அர்ச்சனா ஆகியோருடன் , உறையூரில் உள்ள ஒரு கார் டீலரிடம் ₹.78 ஆயிரத்திற்கு அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது நாள் வரை காரை அடமானம் வைத்து வாங்கிய பணத்தையும், காரையும் திரும்ப தரவில்லை. இது குறித்து  நாராயணம்மாளிடம், அமுதா கேட்ட போது அவரை தகாத வார்த்தைகளால் பேசி, கார் சம்மந்தமாக என்னிடம் வந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து அமுதா நவல்பட்டு காவல் நிலையத்தில் கடந்த மாதம் 20 ஆம் தேதி புகார் அளித்தார். புகாரின் மீது இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அமுதா திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார். புகாரில் தனது காரை மீட்டு தர வேண்டும் எனவும், மேற்கண்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *