திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெள்ள அபாய தடுப்பு பணிகளை குறித்து ஆய்வு மேற்க்கொண்டும் , காவல் துணை ஆணையர்கள் , காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார் . திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளம் காரணமாக தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிப்பு செய்யவும் , பொதுமக்களை வெள்ளப் பகுதியிலிருந்து உடனடியாக பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்து தங்க வைப்பதற்கும்

ஒரு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 10 காவலர்கள் கொண்ட இரண்டு ” திருச்சி மாநகர காவல் பேரிடர் மேலாண்மை குழுவினர்களை ” தக்க பாதுகாப்பு உபகரணங்களுடன் உறையூர் மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையகரகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார் . மேலும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் ( சட்டம் & ஒழுங்கு ) சக்திவேல் உறையூர் காவல்நிலைய எல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *