கடந்த 1959 – ம் ஆண்டு அக்டோபர் 21 – ம் தேதி லடாக் பகுதியில் ‘ ஹாட் ஸ்பிரிங் ‘ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திமர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர் . இந்தச் சம்பவத்தை தொடர்ந்து , நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக , ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 – ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது . :

அதன்படி , திருச்சி மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நாடு முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் , தலைமையுடன் மத்திய மண்டல காவல்துறை தலைவர் மற்றும் துணை தலைவர் , திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் , காவல் கண்காணிப்பாளர்கள் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் , காவல் துணை கண்காணிப்பாளர்கள் , ஆய்வாளர்கள் . உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என அனைவரும் பங்கு கொண்டு காவலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் .

இந்நிகழ்ச்சியின் நிறைவில் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பேசும்போது , 

கடந்த ஆண்டில் நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் பெயர்களையும் மற்றும் திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தில் உயிர்நீத்த காவலர்களையும் மற்றும் கொரோனா பணியின்போது உயிர் நீத்த காவலர்களையும் நினைவு கூர்ந்தார் . பின்னர் துப்பாக்கி முழங்க வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது . அதைத்தொடர்ந்து அனைவரும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர் . வீர வணக்க நாளை முன்னிட்டு போலீஸார் கருப்பு பட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்