சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம் அதிமுகவின் திட்டமல்ல. அது மத்திய அரசு திட்டம். அத்திட்டத்தினை விரைந்து முடிக்க மத்திய அரசு முனைப்பு காட்ட வில்லை. இந்த திட்டத்தில் மத்திய அரசு மற்றும் உலக வங்கி மூலம் நிதி பெற்றால் மட்டுமே இந்த திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்த முடியும் தமிழகத்தில் வட மாநிலத்தவர் மீதான தாக்குதல் நடத்தப்படாமலேயே நடத்தப்பட்டதாக கூறுவது ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் வெற்றியை திசை திருப்பவும் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என முதல்வர் விடுத்த அறிவிப்பை மக்கள் மத்தியில் இருந்து திசை திருப்ப வேண்டும் என சிலர் செய்த சிறுபிள்ளைதனமான செயல்.

திமுக ஒருபோதும் வெறுப்பு அரசியலில் ஈடுபடாமல் விருப்பு அரசியலில் மட்டுமே ஈடுபடும். திமுக அரசு கவிழ்க்க முயல்வதாக தி மு க தலைவர் கூறி இருப்பது என்னைவிட அவருக்கு அதிகம் தெரியும் என்பதை உணர்த்துகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட திட்டங்களை ஆளும் திமுக அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் ஆளும் கட்சியாக மாறும் போது பழைய செயல்பாடுகளை முடக்கப் பார்ப்பார்கள். ஆனால் திமுக அரசு அதிமுக அரசின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.இந்த பேட்டியின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *