திருச்சி மாநகராட்சி உறையூர் நடுநிலைப்பள்ளியில், திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தினார்.இதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 22,23,24,26,27 ஆகிய 5 வார்டுகளை சேர்ந்த மக்கள் நேரில் வந்து குறைகளை தெரிவித்தனர்.இந்த முகாமில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், மாநில பொதுச்செயலாளர் வக்கீல் சரவணன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் ரெக்ஸ்,கவுன்சிலர் சோபியா விமலா ராணி, புத்தூர் சார்லஸ், பட்டேல்மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.இதன் பின்னர் திருநாவுக்கரசர் எம்.பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நீரை பெறுவதில் திமுகவுடன் இணைந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் போராட்டங்களில் பங்கெடுக்கும்.எந்த அரசியல் கட்சியாலும் காவிரி பிரச்சினையை பேசி தீர்க்க முடியாது. உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள சட்டப்படியான தீர்ப்பின் அடிப்படையில் அடிப்படையில் மட்டுமே காவேரி பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். தேர்தல் காலத்தில் திருச்சி மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், எனக்கு ஒடுக்கப்பட்ட நிதி ஆதரத்தைக் கொண்டு நிறைவேற்றி இருக்கிறேன். காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைகள் காலம் காலமாக இருந்து வருகிறது. அப்பிரச்சனை வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த விதத்திலும் பிரதிபலிக்காது வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் தலைமை வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன் .இவ்வாறு திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்