Society for the Promotion of Indian Classical Music And Culture Amongst Youth (SPIC-MACAY) மாணவர்களுக்கு இந்திய கலாச்சார பாரம்பரியத்தின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கம்கொண்ட, அரசியல் சார்பற்ற மக்கள் இயக்கமாகும் இச்சங்கம் 45 ஆண்டுகளாக 1500க்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களுக்குள் பாரம்பரிய இசை, நடனம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், உரைகள், தியானம், யோகா மற்றும் கைவிளைக் கற்பித்தல், பண்டைய கட்டிடக்கலை, நடைப்பயிற்சி, சினிமா திரையிடல் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவருகிறது. 73 வயதான Prof (Dr) கிரண் சேத் SPIC-MACAYவின் நிறுவனர் பத்மஸ்ரீ விருது பெற்றவர் மற்றும் IIT Delhi-ன் முன்னாள் பேராசிரியர், காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை சைக்கிள் யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் 15, 2022 அன்று ஸ்ரீநகரிலிருந்து சைக்கிள் ஓட்டத்தொடங்கி 6 மாதங்களுக்குப்பிறகு கன்னியாகுமரியை சென்று அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் SPIC-MACAY-வின் செய்தியைப் பரப்பவும், மகாத்மா காந்தியின் எளிய வாழ்க்கை மற்றும் உயர் சிந்தனையை மேம்படுத்தவும் அவர் இந்த யாத்திரையை மேற்கொள்கிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று காலை திருச்சி வந்தவர் திருச்சியில் உள்ள கல்லூரி, பள்ளி மற்றும் என்ஐடி சென்று தனது பயணம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து இன்று காலை திருச்சியில் இருந்து தனது பயணத்தை புதுகோட்டை நோக்கி புறப்பட்டார்.

 முன்னதாக செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர் தற்போதுள்ள தலைமுறையினர் கலாச்சாரம், பாரம்பரிய இசை, நடனம், நாட்டுப்புற கலைகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர். ஒரு கல்லூரியில் சென்று பேசும் பொழுது சுமார் 500 பேர் பயிலும் அந்த கல்லூரியில் ஒரு மாணவி கூட பரதநாட்டியம் கற்றுக் கொள்ளவில்லை எனக் கூறுவது வியப்பாக உள்ளது. மேலும், காந்தியின் எளிமை விளக்கும் வகையில் சாதாரன சைக்கிள் தான் தற்பொழுது நான் பயணம் செய்து வருகிறேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *