திருச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநில அளவிலான செயற்குழு கூட்டம் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு தலைமையில் நடைபெற்றது இதில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் முன்னிலை வகித்தார்

இதில் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணா ஆழ்வார் கூறுகையில்: ராகுல் காந்தி மக்களின் ஒற்றுமை, விலைவாசி உயர்வு , வேலை வாய்ப்பு ஆகிய குறித்து பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வருகிறார் இதேபோன்று நாங்களும் தமிழகத்தில் இதை வலியுறுத்தி மக்களிடம் கொண்டு செல்வோம்

 ராகுல் காந்தியின் இந்த பயணம் உலகம் முழுவதும் நல்ல பெயரை ராகுல் காந்திக்கும் காங்கிரசுக்கும் பெற்று தருகிறது குஜராத் தேர்தலில் கடைசி ஒரு மணி நேரத்தில் 16 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளது இது குறித்து விசாரணை நடைபெறுகிறது

 மல்லிகார்ஜுனா கார்கே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆன பின்பு எல்லா மாநிலங்களிலும் என்ன பிரட்சனை அதை எப்படி சரி செய்வது என்று ஆலோசித்து கொண்டு உள்ளார் வரும் நாட்களில் அனைவரும் இணைந்து இந்தியாவிற்காக போராடுவோம் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *