புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் திருச்சி மரக்கடை அருகே இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்க்கி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழாதன், தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் சின்னதுரை , மக்கள் கலை இலக்கிய கழகம் மாவட்ட செயலாளர் ஜீவா, மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், SDPI கட்சி மாவட்ட தலைவர் முபாரக் . ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், சமூக நீதிப் பேரவை மாவட்ட தலைவர் ரவிக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக்குழு லதா பாடல் பாடினார். இதில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் முற்போக்கு ஜனநாயக பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *