திருச்சி மாநகர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. வருண் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியது.. கடந்த 18.09.2023-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஜியாவுதின், இவரது நண்பர் ஜெகதீஷ் மூலம் பழக்கமான துவரங்குறிச்சியை சேர்ந்த அன்வர் பாஷா என்பவர் தன்னிடம் வெளிநாட்டு தங்கம் உள்ளதாகவும், 15 லட்சம் கொண்டு வாருங்கள் நகையை தருகிறேன். என தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு ஜியாவுதீன் தனது நண்பரான கார்த்திக் என்பவருடன் ரூ.14,50,000/- எடுத்துக்கொண்டு 18.09.2023-ம் தேதி மாலை சுமார் 03.45 மணியளவில், அன்வர் பாஷா வர சொல்லிய இடமான துவரங்குறிச்சி மோர்னிமலை முருகன் கோவில் பின்புறம் சென்றுள்ளனர். அங்கு, TN 68 A3 2997 என்ற பதிவெண் கொண்ட காரில் ஜியாவுதீன் மற்றும் கார்த்தி ஆகியோர் வந்து, அங்கிருந்து அன்வர் பாஷாவிற்கு போன் செய்த போது, அங்கு மற்றொரு காரில் அன்வர் பாஷா மற்றும் 7 நபர்கள் இருந்தனர். அதில் ஒரு நபரை அனுப்பி ஜியாவுதினிடம் பணம் இருப்பதை உறுதி செய்து கொண்டு, தகவலை அன்வர் பாஷாவிற்கு இரகசியமாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து உடனடியாக, காரில் காக்கி சீருடை அணிந்த ஒருவருடன் மற்ற 7 நபர்களும் சேர்ந்து வந்து, ஜியாவுதீன் மற்றும் அவரது நண்பர் இருந்த காரின் பின்புறம் ஏறி, கார்த்தி கழுத்தின் கத்தியை வைத்தும், மிரட்டியும் அவர்கள் வைத்திருந்த பணம் ரூ.14,50,000 யை பறித்துச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் குற்ற எண்:224/2023 u/s 147, 506(ii), 420, 392 IPC வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில், வழக்கின் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண குமார், உத்தரவின் பேரில் தனிப்படையினர் தேடிவந்தனர். அப்போது 21.09.2023 மதியம் 11.30 மணியளவில் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, டி.பொருவாய் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பாலத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த TN-01-AQ-1167 என்ற பதிவெண் கொண்ட காரின் அருகின் சென்ற போது, காரில் இருந்த 4 நபர்கள் தப்பியோட முயற்சித்துள்ளனர். காவல்துறையினர் அந்த நபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

மேலும் இச்சம்பவம் போன்றே கடந்த 28:01.2023ம் தேதி திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலையத்திற்குட்பட்ட மஞ்சம்பட்டி, சந்தானமாதா கோவில் அருகில் உள்ள பாலசுப்பிரமணி என்பவரிடம் இதே பாணியில் குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி. ரூ.10,50,000 – ஐ ஏமாற்றி கொண்டு சென்றதாக, கொடுக்கப்பட்ட புகாரின் பேரில்) மணப்பாறை காவல் நிலைய குற்ற எண்.56/23 u/s 420 IPC வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது ஏற்கனவே கைது செய்யபட்ட 4 பேரிடம் குறுக்கு விசாரணை மேற்கொண்டதில், தாம் கடந்த 26.01.2023ம் தேதி மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மஞ்சம்பட்டி பகுதியில் பாலசுப்பரமணியன் என்பவரிடம் ரூ.10,50,000 ஐ ஏமாற்றி பணத்தை எடுத்துசென்றதாக, தாமாகவே அவர்களது ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஒரு தங்ககட்டி (100 கிராம்), 10-போலி தங்கக்கட்டிகள், ரூ.2,70,000/- பணம், 21-செல்போன்கள், போலி பத்திரங்கள், 2-காசோலை புத்தகங்கள், வாகனத்தின் 2-போலி பதிவெண் பலகைகள், தமிழ்நாடு அரசு முத்திரை கொண்ட Civil Judge என எழுதப்பட்ட லோகோ, 12-சிம் கார்டுகள் மற்றும் TN-01-AQ-1167 என்ற பதிவெண் கொண்ட கார் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்கம் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக இதுபோன்று ஏமாற்றவர்களிடம் சென்று பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். திருச்சி புறநகர பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் விளையாடி அவர்கள் என கண்டறிந்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமயபுரம் அருகே பட்டாசு உற்பத்தி செய்யும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போது அவர்கள் சில ரௌடிகளுக்கு நாட்டு வெடிகுண்டு தயாரித்து தருவதாக புகார்கள் வந்து அடிப்படையில் அது சம்பந்தமாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் குட்கா ,போதை பொருள், போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளை முழுமையாக தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் தீவிர படுத்தியுள்ளோம். குறிப்பாக இதுவரை வந்த அனைத்து புகார்களும் பொதுமக்கள் தான் தெரிவித்துள்ளனர். மேலும் நான் வழங்கிய புகார் எண்ணிற்கு பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகிறார்கள், அதன் அடிப்படையில் ஒவ்வொரு புகார்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். பொதுமக்களிடையே இந்த எண் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *