திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தில், சிப்காட் விரிவாக்கத்திற்கு 1,200 ஏக்கரை கையகப்படுத்த அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்திய ஏழு விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆறு பேர் மீதான குண்டர் சட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய அருள் என்பவர் மீதான, குண்டர் சட்ட நடவடிக்கை விலக்கப்படவில்லை.
இதை கண்டித்தும் சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், திருவண்ணாமலை கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 100 க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் அவர்களுடன் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்