சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக மாவட்ட அளவிளான குத்துச்சண்டை போட்டி வருகின்ற ஆகஸ்ட் 13, 14, மற்றும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள திருச்சி மாவட்டத்தில் இருந்து குத்துசண்டை விளையாட்டு வீரர்கள் மொத்தம் 14 நபர்கள் திருச்சி மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சார்பில் குத்துச்சண்டை பயிற்சியாளர் செல்வகுமார் NIS, SJT Coach தலைமையில் நேற்று இரவு திருச்சி ரயில் நிலையத்திலிருந்து மலைகோட்டை விரைவு ரயில் மூலமாக சென்னை புறப்பட்டனர்.

இவர்களை மாற்றம் அமைப்பினர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். இப்போட்டியில் sub junior (under15) 5nos junior (under 17) 3 nos Youth (under19)1nos Senior (34) பிரிவில் 5nos மொத்தம் 14 குத்துச்சண்டை விளையாட்டு வீரர்கள் திருச்சி மாவட்டத்திலிருந்து பங்கேற்க உள்ளனர். நேற்று இரவு திருச்சியிலிருந்து ரயில் மூலமாக சென்னைக்கு புறப்பட்ட இவர்களை

திருச்சி மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் செயலாளர் நடராஜன் மாற்றம் அமைப்பின் நிறுவனர் ஆர்.ஏ.தாமஸ் வழக்கறிஞர் பாவாணன், உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்பாபு, ரத்தினம்,மைக்கேல், அரவிந்த், மணி, வெள்ளைசாமி, பாபு, ராஜேஷ் புதியபாதை அறக்கட்டளை நிர்வாகிகள் தீபலட்சுமி ஆர்மஸ்டாரங் ராபி ,செந்தில்குமார் மற்றும் விளையாட்டு வீரர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *