இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு யூதர்களின் ராஜாவாகிய இயேசு பவனியாக செல்லும்போது ஜெருசலேம் மக்கள் அவரை தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, என வழி நெடுக வரவேற்றனர். அப்போது குருத்தோலைகளை மக்கள் பிடித்து இயேசுவை வரவேற்றதாக வேதாகமம் வெளிப்படுத்துகிறது.

இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.

அதன் படி திருச்சி மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி ஆலயங்கள் குருத்தோலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. குருத்தோலையால் தயாரிக்கப்பட்ட சிலுவைகளை சபை மக்களுக்கு ஆயர்கள் வழங்கி அருள் ஆசியும் கூறினர்.

அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் குருத் தோலையை பிடித்தவாறு ஆலயத்தை சுற்றி வந்ததோடு, ஆலயம் அமைந்துள்ள பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர். மேலும் இதேபோல் திருச்சி பொன்மலை ஆலயத்தில் உள்ள பங்கு மக்கள் குருத்தோலை ஏந்தி பேரணியாக சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்