திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உதவி கமிஷனர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திலுள்ள முக்கிய ரவுடிகளின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை தினசரி ஆய்வு செய்து , புலன் விசாரணை நிலையில் உள்ள வழக்குகளை விசாரணை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றியும் , ரவுடிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கான உரிய தண்டனையை பெற்றுத்தர காவல் உதவி கமிஷனர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர்களை சந்தித்து , நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் , சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் இ.த.ச பிரிவு 229 ( A ) -ன்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ,

பழிவாங்கும் கொலை சம்பவங்கள் நடைபெறா வண்ணம் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை அடையாளம் கண்டறிந்து அவர்கள் தொடர்பான ஆவணங்களை சேகரித்து காவல் அலுவலர்கள் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்றும் , அனைத்து சரித்திர பதிவேடு ரவுடிகளை காவல் அலுவலர்கள் தினசரி தணிக்கை செய்ய வேண்டும் என்றும் , நிபந்தனைக்குட்பட்டு பிணையில் வந்தவர்கள் நிலையத்தில் கையொப்பமிடுகிறார்களா என்று தணிக்கை செய்ய வேண்டும் என்றும் ,குற்ற வழக்குகளிலிருந்து விடுதலையான எதிரிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் , செயல்பாட்டில் உள்ள சரித்திர பதிவேடு ரவுடிகளின் சொத்து விபரங்களை சேகரித்து அது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் , திருச்சி மாநகரத்தில் ரவுடிகளால் ஏற்படும் குற்ற சம்பவங்கள் அறவே தடுக்கும்பொருட்டு தகுந்த முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் காவல் உதவி கமிஷனர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் எவ்வித பாரபட்சமின்றி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கூறினார் .இந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் ( சட்டம் மற்றும் ஒழுங்கு ) சக்திவேல் மற்றும் திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் ( குற்றம் மற்றும் போக்குவரத்து ) முத்தரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்