காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் கீழ் திருச்சி காவேரி ஆற்றில் இருந்து கொண்டு செல்லப்படும் தண்ணீர் சுமார் 5730 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசன விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மணிகண்டம் ஒன்றியத்தின் கீழ் கண்ட பஞ்சாயத்தில் உள்ள ஆலந்தூர் பெரியகுளம். செங்குளம். செட்டுக்காரன் குளம். கருமங்குளம். மாத்தூர். சின்ன குளம். அம்மாபேட்டை கரையான் குளம். இனாம் குளத்தூர் பெரிய ஆலம்பட்டி பெரியகுளம். தோமையார்புரம் குளம். சேதுராப்பட்டி எரங்குடி பெரியகுளம்.

நாகமங்கலம் சின்ன குளம். ஆகிய குளங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மக்கள் உரிமை கூட்டணி மண்டல செயலாளர் காசிம் தலைமையில் மண்டல விவசாய அணி செயலாளர் அந்தோணி முத்து முன்னிலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு சமூக அமைப்புகள் தோழமைக் கட்சிகள் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட தோழமைக் கட்சிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *