சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி சாமானிய மக்கள் நல கட்சியின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளாக:- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் பகுதியில் சட்டவிரோதமாக கண்மாய் ஏரி மற்றும் குளத்தில் மண் எடுத்துள்ள நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக்கோரியும் இயற்கையின் நலனில் அக்கறை கொண்டு அரசிடம் புகார் அளித்தவர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதை உடனடியாக ரத்து செய்ய கோரியும், மணல் அள்ளுபவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி சாமானிய மக்கள் நலக் கட்சி மற்றும் தோழமை கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *