தேசிய குழந்தைகள் பாதுகாப்பு, சர்வதேச குழந்தைகள் தினம் குழந்தைகள் வன்முறைகளுக்கு எதிரான தினத்தையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி குழந்தைகளுக்கான நடை எனும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்ந பேரணியில் குழந்தைகள் வன்முறைக்கு எதிராகவும்,குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஓழிப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

மேலும் இப்பேரணியில் குழந்தைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த பேரணியின் போது குழந்தைகள் மௌன நாடகம், சிலம்பம், கத்தி சண்டை, நிஞ்சா சாகசம் ஆகியவற்றை செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *