இன்று நடைபெறவிருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில், உரிய விசாரணை நடத்த தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 9-ம் தேதியில் இருந்து 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாட தேர்வும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித தேர்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் இத்தேர்வுகளுக்கான கேள்வித்தாள்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலையில் இருந்து கேள்வித்தாள் வெளியானதாக கூறப்படும் நிலையில், விசாரணை நடத்த தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா உத்தரவிட்டுள்ளார்.

 

வருகிற நாட்களில் கொரோனாவை தொடர்ந்து வேறு தொற்றுகள் ஏற்பட்டால், தற்போதைய திருப்புதல் தேர்வையே பொதுத் தேர்வாக கருதி மதிப்பெண்கள் வழங்க கல்வித்துறை பரிசீலித்து வருவதாக கூறப்படும் நிலையில், கேள்வித்தாள் வெளியான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.