தமிழகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தமிழக அரசு பல்வேறு சிறப்பு முகாம்களைநடத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 18வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு லட்சத்து 92 ஆயிரம் பேர் உள்ளனர்.

அதில் தற்போது ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும் மீதமுள்ள 42 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்காக சிறப்பு முகாம்களை மாநகராட்சி நடத்திவருகிறது. இந்த சிறப்பு முகாமினை ஊக்குவிக்கும் விதமாக திருச்சி மாநகராட்சி சார்பாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த வாரம் கோ.அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9000 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குலுக்கல் முறையில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று திருச்சி கோ.அபிஷேகபுரம் மாநகராட்சி கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முதல் பரிசு தங்க நாணயமும், இரண்டாம் பரிசாக மிதிவண்டியும், மூன்றாம் பரிசாக வெள்ளி குத்து விளக்கும், நான்காம் பரிசாக பட்டு புடவையும், ஐந்தாம் பரிசாக பிரஸர் குக்கர் வழங்கப்பட்டது.

மேலும் ஆறுதல் பரிசாக 25 பேருக்கு ஒருமாத காலத்திற்கான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை கோ.அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையர் செல்வ பாலாஜி வழங்கினார். அருகில் சுகாதார அலுவலர் இளங்கோவன், உதவி வருவாய் அலுவலர் துரை மற்றும் வருவாய் ஆய்வர் தாமோதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *