திருச்சி மாநகர ஊர்காவல் படையில் கடந்த 18.01.2011 -ம் தேதி முதல் பணிபுரிந்து வந்த அடைக்கலராஜ் என்பவர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 18.05.21 – ந்திே திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி 03.06.2021 ந்தேதி இறந்துவிட்டார் .

அவரது குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு உதவும் வகையில் தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து ரூ .15,000 / – மற்றும் திருச்சி மாநகர ஊர்காவல்படையை சேர்ந்த ஆளிநர்கள் திரட்டிய நிதியையும் சேர்த்து மொத்தம் ரூ .85,000 / -க்கான காசோலையை அடைக்கலராஜின் மனைவி ஞானகியூரியிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வழங்கினார் . மேலும் காவல் உதவி ஆணையர் . திருச்சி மாநகர ஆயுதப்படை , ஊர்காவல்படை வட்டார தளபதி , துணை வட்டார தளபதி மற்றும் நிறும தலைவர் ஆகியோர் உடனிருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *