திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் சளி நோயாளிகளுக்கு தீர்வு காணும் வகையில் “அல்ட்ரா நாசோ கிளியர்” மருந்தினை திருச்சி மாவட்ட ஆயுர்வேத தலைமை சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் அறிமுகப்படுத்தினார். இந்த மருந்தினை அனைவரும் பயன்படுத்தலாம் எனவும் சளி பிரச்சனைகளை விரைவில் தீர்க்கக்கூடிய மருந்தாகவும் இது இருக்கிறது எனவும் கொரோனா பாதித்தவர்களுக்கு இம்மருந்தை பயன்படுத்தி சோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது. என திருச்சி மாவட்ட ஆயுர்வேத தலைமை சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தெரிவித்தார்.

மேலும் சுமார் 150 கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தினை கொடுத்துள்ளோம். அனைவரும் நன்றாக உள்ளனர். இதன் விலை தற்போது 225 ரூபாயாக உள்ளது, இதன் பயன் பாடுகள் அதிகரித்தால் விலை குறைக்கப்படும் என தெரிவித்தார். இந்த மருந்தினை சைனஸ், மூக்கு அடைப்பு, இருமல், தும்மல்,ஆஸ்துமா ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கின்றது. ஒரு வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் மருத்துவர்களின் பரிந்துரையின் படி உபயோகிக்கலாம்.இந்த மருந்து அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும் என கூறினார்.

அல்ட்ரா நாசோ கிளியர் நாசல் டிரப்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜயபாஸ்கர், இயக்குனர் விக்னேஷ் மற்றும் திருச்சி,கரூர், அரியலூர், பெரம்பலூர் போன்ற ஊர்களிலிருந்து ஏராளமான மருத்துவர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அல்ட்ரா நாசோ கிளியர் மருந்தின் மூலப்பொருட்கள் , தயாரிப்பு முறை,மருந்தின் ஆய்வு முடிவுகள், பயனாளிகளின் கருத்துகள் வீடியோக்கள் பதிவுடன் நிகழ்ச்சி பங்கேற்றவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்