உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி தாய்ப்பால் ஊட்டுவதை பேணிக்காப்பது செவிலியர்களின் பொறுப்பு என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் தலைவர் செங்குட்டுவன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது…

இக்கூட்டத்தில் தாய்ப்பால் ஊட்டுவதை பேணிக்காப்பது அனைவரின் பொறுப்பாகும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இந்த கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக இந்திய மருத்துவ மன்றத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஹசரப் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குழந்தைகள் நல மருத்துவர் தீபா முகுந்தன் பேசுகையில்…

தற்போது கொரோனா நோய்த்தொற்று மூன்றாவது அலை பரவத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் தாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பதே மிக சிறந்த முதல் தடுப்பூசி, மேலும் தற்போது பெரும்பாலான கர்ப்பிணி பெண்கள்,குழந்தை பெற்ற தாய்மார்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அஞ்சுகின்றனர். கர்ப்பமடைந்த பெண்கள் முதல் குழந்தை பெற்ற பாலூட்டும் தாய்மார்கள் வரை அனைவரும் எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இதன் மூலம் குழந்தைகளுக்கு எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. குறிப்பாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பாலூட்டும் தாய்மார்கள் தாராளமாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டலாம். முன்னதாக கொரோனா பாதிக்கப்பட்ட தாய்மார்கள் முக கவசம் அணிந்து கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பிறகு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டலாம் என தெரிவித்தார்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *