திருச்சி பாலக்கரை கீழப்புதூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகண்ணன் என்பவரை கடந்த 09.05.2021 இரவு 7 மணியளவில் ஹீபர் ரோடு AKB மோட்டார்ஸ் அருகில் முன்பகை காரணமாக 7 நபர்கள் அரிவாள் மற்றும் பெரிய கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது தொடர்பான அமர்வு நீதிமன்ற காவல்நிலைய குற்ற எண் . 260/2021 u / s 147 , 148 , 341 , 302 IPC கொலை வழக்கில் ஈடுபட்டு தலைமறைவான 7 எதிரிகளையும் ,

படுகொலை செய்யப்பட்ட வக்கீல் கோபி கண்ணன்
திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரப்படி தனிப்படை உதவி ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர் அந்தோணி செல்வம் , தலைமை காவலர்கள் சரவணன் ,ஜானி . இனுஸ்டின் .கெல்லர் ஜேக்கப் ,தனசேகரன் மற்றும் சவுக்கத் அலி ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு கொலை குற்றவாளிகளை கைது செய்யவும் , அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தவும் உதவியாக இருந்துள்ளார்கள்.இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரைத் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் வெகுவாக பாராட்டி பணிப்பாராட்டு சான்று மற்றும் பண வெகுமதி வழங்கினார் .

_______________________________________________

இதே போன்று கடந்த 08.05.2021 அன்று பிரனவ் ஜுவல்லரி என்ற நகைக்கடை ஊழியர் மார்டின் ஜெயராஜ் சுமார் 11 கிலோ நகைகளை பெற்றுக் கொண்டு சென்னையிலிருந்து திருச்சிக்கு வரும் வழியில் மர்ம நபர்கள் அவரை செய்து நகைகளை கொள்ளையடித்தது தொடர்பான உறையூர் குற்றப்பிரிவு காவல் நிலைய குற்ற எண் .387 / 2021 U / s 408 , 420 @ 147 , 148 , 120 ( B ) 342 , 302 , 380 , 201 IPC வழக்கில் ஈடுபட்ட முக்கிய எதிரிகள் 7 பேரையும் குற்றப்பிரிவு தனிப்படை உதவி ஆய்வாளர் சங்கரி தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர்கள் . மாதவன் . செபஸ்டின் , தலைமை காவலர் விஜயராஜ் ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் துரிதமாக செயல்பட்டு 12 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து வழக்கின் சொத்தான தங்க நகைகள் , கொலைக்கு பயன்படுத்திய ஆயதங்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை கைப்பற்றவும் உதவியாக இருந்துள்ளார்கள் . இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை

திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் வெகுவாக பாராட்டி பணிப்பாராட்டு சான்று மற்றும் பண வெகுமதி வழங்கினார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *