திருச்சி லால்குடி அருகே அரியலூர் ஊராட்சி செங்கரையூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே 1996 மற்றும் 98 ஆம் ஆண்டு நான்கு ஆழ்துளை கிணறு அமைத்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்திற்கு கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே அமைத்த ஒரு ஆழ்துளை கிணறு ஒன்றில் குடிநீர் சப்பளை குறைவானதால் மீண்டும் ஐந்தாவதாக ஆழ்துறை கிணறு அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை தடுத்து நிறுத்தியும் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதால் இங்குள்ள பொது மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும் விவசாயத்திற்கும் போதிய நீர் கிடைக்கவில்லை எனவும், மீண்டும் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் எடுத்தால் எங்களுடைய எதிர்கால குடிநீர் மற்றும் விவசாயம் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த லால்குடி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் லால்குடி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேசிய வட்டாட்சியர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை நிறுத்தியும் அதற்குண்டான மூலப்பொருள்களை அப்ரூவல் கொடுத்ததாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.

தற்காலிகமாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களுக்குள் கிராம மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுமா அல்லது அந்த திட்டத்தை கைவிடுவார்களா என அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *