திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள செல்வ விநாயகர் திருக்கோயில் அருகே உள்ள குப்பை கழிவுகளை உடனடியாக மாநகராட்சி அகற்றக் கோரி இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம் வார்டு, 23 ஹீபர் ரோடு, பாலக்கரை, பகுதியில் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் உள்ளது. இதன் அருகில் பல ஆண்டுகளாக குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு தற்போது குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மேலும் அந்த குப்பை மேடு பகுதியில் சிறுநீர் கழிக்கும் இடமாக மாறி உள்ளது. இதனால் செல்வவிநாயகர் திருக்கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் அந்த இடம் காட்சியளிப்பது மட்டுமல்லாது, தற்போது மழைக்காலம் என்பதால் குப்பை கழிவுகளுடன் துர்நாற்றம் அதிகம் வீசுவதால் நோய்தொற்று பரவக்கூடிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

அதுமட்டுமல்லாது திருக்கோயிலுக்கு பெண் பக்தர்கள் குழந்தைகள் என அதிக அளவில் வரக்கூடிய இந்த கோவில் பகுதியில் ஆண்கள் சிறுநீர் கழிப்பதால் பெண் பக்தர்கள் மட்டுமல்லாது அந்த பகுதியில் உள்ள பெண்களும் முகம் சுளித்துக் கொண்டு நடந்து செல்கின்றனர். குறிப்பாக இந்த கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் தினந்தோறும் பார்த்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது. நடவடிக்கை எடுக்கவேண்டிய மாநகராட்சி அதிகாரிகளே இந்த அவலம் நடப்பதை கண்டு இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்க செயலாகும். இனியாவது சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து சிறுநீர் கழிப்பிடமாக இருக்கக்கூடிய இடத்தை சுத்தம் செய்து இதுபோன்ற அசுத்தம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்தால்,

அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் நிம்மதியாக நடந்து செல்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும், மேலும் திருக்கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள், மற்றும் அனைத்து பக்தர்களும் நிம்மதியாக சாமி தரிசனம் செய்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *