சர்வதேச மனநிலை தினத்தை முன்னிட்டு மாவட்ட மனநலத் திட்ட இணை இயக்குனரகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மற்றும் மனநல பராமரிப்பு மையம் இணைந்து நடத்தும் மனநல விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மனநல விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு கலெக்டர் ஆபிஸ் ரோடு வழியாக வெஸிட்ரி மேல்நிலைப் பள்ளி அருகே நிறைவடைந்தது. இப்பேரணியில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டர்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார்:- டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குறிப்பாக மூன்றுக்கும் மேற்பட்ட பாதிப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து, அங்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளதுடன், மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது குழந்தை வெளிமாவட்டத்தில் இருந்து வந்தவர்.நான்கு வயது குழந்தை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 93 பட்டாசு கடைகள் உள்ளது. அவை உரிய பாதுகாப்புடன் இயங்குகிறதா என்பது குறித்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *